• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தனி வார்டாம்…வேட்பாளரின் அறியாமை

Byமகா

Feb 5, 2022

தனி வார்டு என்பதைக் கூட அறியாமல் அறிவிக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்து திரும்பி சென்றார்.

விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 32,29,11,14 ஆகிய 4 வார்டுகளில் மட்டும் போட்டியிட வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்தது. இன்று கடைசி நாள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். அதில் 11 வது வார்டு தனி பெண் வார்டு ஆகும்.

இதற்கு ஆண் வேட்பாளரான விக்னேஷ்வரன் மனுத்தாக்கல் செய்ய வந்தார்.மேலும் தனி வார்டு ஆகும்.ஆனால் அவர் தனி வார்டுக்கான சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல.இந்த அடிப்படையை கூட அறிந்து கொள்ளாமல் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்துள்ள கேலிக் கூத்து விருதுநகர் நகராட்சியில் நிகழ்ந்துள்ளது.விக்னேஷ்வரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக வந்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மணியிடம் தனது வேட்பு மனுவை கொடுத்த பின்தான் அந்த வார்டு தனி பெண் வார்டு என்பது விக்னேஷ்வரனுக்கு தெரிந்துள்ளது. இதனை அடுத்து கொடுத்த வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டு சோகமாக திரும்பி சென்றார்.

தனி வார்டு என்பதும் தெரியாமல் ,பெண் வார்டு என்பதும் தெரியாமல் நாம் தமிழர் கட்சி தலைமை ஆண் வேட்பாளர் அறிவித்திருக்கிறது.கட்சித்தலைமையையும் வார்டு பற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ளாமல் அறிவித்துள்ளது.

வேட்பாளரும் வார்டு பற்றிய விபரம் தெரிந்து கொள்ளாமல் மனுத்தாக்கல் செய்ய வந்தது நாம் தமிழர் கட்சியின் அவலத்தை எடுத்துக் காட்டும் விதமாக இருந்தது.