நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, 7.2.2022 முதல் 14.2.2022 வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது!
07.02.2022, திங்கள் கிழமை, காலை 8.30 – சிவகாசி மாநகராட்சியிலும், மதியம் 12.30 – நாகர்கோவில் மாநகராட்சியிலும், பிற்பகல் 3.00 – திருநெல்வேலி மாநகராட்சியிலும், மாலை 5.00 – தூத்துக்குடி மாநகராட்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்!
08.02.2022, செவ்வாய் கிழமை, காலை 9.00 – மதுரை மாநகராட்சியிலும், காலை 11.30 – திண்டுக்கல் மாநகராட்சியிலும், பிற்பகல் 3.00 – கரூர் மாநகராட்சியிலும், மாலை 5.00 – திருச்சிராப்பள்ளி மாநகராட்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்!

10.02.2022, வியாழக் கிழமை, காலை 9.00 – வேலூர் மாநகராட்சியிலும், மதியம் 12.30 – காஞ்சிபுரம் மாநகராட்சியிலும், பிற்பகல் 3.30 – தாம்பரம் மாநகராட்சியிலும், மாலை 6.00 – ஆவடி மாநகராட்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்!
11.02.2022, வெள்ளிக் கிழமை, காலை 9.30 – வட சென்னையிலும், பிற்பகல் 3.00 – தென் சென்னையிலும், மாலை 5.00 – சென்னை புறநகர் பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்!
14.02.2022, திங்கள் கிழமை, காலை 9.00 – கோவை மாநகராட்சியிலும், காலை 11.00 – திருப்பூர் மாநகராட்சியிலும், பிற்பகல் 3.00 – ஈரோடு மாநகராட்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக, கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது!











; ?>)
; ?>)
; ?>)