• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

போகும் இடமெல்லாம் பொண்டாட்டி.. மனுசனாடா நீ

போகும் இடமெல்லாம் அடுத்தடுத்து பெண்களை திருமணம் செய்துகொண்டு வந்த கணவனின் செயல்களை ஒவ்வொரு மனைவிகளும் கண்டுப்பிடித்ததால், தான் திருமணம் செய்த 8 மனைவிகளையும் அந்த கணவன் ஒரே வீட்டில் தங்க வைத்து வசித்து வரும் சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
தாய்லாந்து நாட்டில் தான் இப்படி ஒரு வித்தியாசமான சம்பவம் அரங்கேறி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது, தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர், அந்நாட்டில் டாட்டூ கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.
டாட்டூ கலைஞரான தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட், ஒரு பெண் பிரியர் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், தனது அழகு, இளமை மற்றும் திறமையை வைத்து இவர் பல பெண்களையும் மயக்கி விடுவது இவருக்கு கை வந்த கலை என்றும் கூறப்படுபிறது. அதன் படி, டாட்டூ கலைஞரான டம் சரோட், தன் முதல் மனைவியை ஒரு திருமணத்தில் சந்தித்து அவரிம் பேசி, அந்த பெண்ணின் மனதை மாற்றி காதலித்து அவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து, 2 வது மனைவியை அந்நாட்டில் உள்ள ஒரு பிரபலமான ஒரு மார்க்கெட்டில் வைத்து சந்தித்து, அவரின் அழகின்பால் ஈர்க்கப்பட்டு, அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையில் வைத்து ஒரு பெண்ணை சந்தித்து, அவரிடம் காதல் வயப்பட்டு, அந்த பெண்ணை அவர் 3 வதாக திருமணம் செய்துகொண்டார்.
அதே நேரத்தில், சோசியல் மீடியாவில் அதிகம் தன்னை மூழ்கடித்துக்கொண்டிருந்த டாட்டூ கலைஞரான டம் சரோட், பல பெண்களிடமும் தொடர்ந்து சாட்டிங்கில் ஈடுபட்டு வந்தார்.
அதன் படி, பிரபலமான சோசியல் மீடியாவனா இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்து இந்த 3 விதமான சோசியல் மீடியாவில் இருந்தும் ஒவ்வொரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்து காதலித்து வந்த அந்த இளம் பெண்களை தனது 4, 5 மற்றும் 6 வது மனைவிகளாக அவர் அடுத்தடுத்து வரிசையாக திருமணம் செய்து உள்ளார்.
இதனையடுத்து, இந்த காதல் மன்னன் டம் சரோட், தனது தாயாருடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று உள்ளார். அப்போது, அந்த கோயிலுக்கு வந்த ஒரு இளம் பெண்ணின் அழகில் மயங்கி, அவரிடம் பேசி அந்த பெண்ணை இவர் 7 வதாக திருமணம் செய்துகொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, தான் சுற்றுலா சென்ற இடத்தில் சந்தித்த ஒரு இளம் பெண்ணை காதலித்து, அந்த பெண்ணை காதல் மன்னன் டம் சரோட், 8 வதாக திருமணம் செய்துகொண்டார்.
இப்படியாக, 8 பெண்களையும் திருமணம் செய்துகொண்ட காதல் மன்னன் டம் சரோட், அந்த 8 மனைவிகளுக்கும் தெரியாமல் ஒவ்வொரு பெண்களுடனும் மாறி மாறி அவர் குடும்பம் நடத்தி வசித்து வந்திருக்கிறார்.
ஆனால், ஒரு கட்டத்தில் தனது கணவனின் இந்த செயல், அந்த 8 மனைவிகளுக்கும் தெரிய வந்த நிலையில், இது குறித்து அந்த 8 பேரும் தங்களது கணவனிடம் நியாயம் கேட்டு உள்ளனர்.
இப்படியாக, ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் இருப்பதை அந்த எட்டு மனைவிகளும் கண்டு பிடித்து நிலையில், அவர்கள் அனைவரையும் ஒரே வீட்டிற்கு வரவைத்து உள்ளார்.
அதன் பிறகு, அனைவரையும் சமாளித்து அந்த 8 மனைவிகளுடனும் ஒரே வீட்டில் காதல் மன்னன் டம் சரோட், தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
குறிப்பாக, 8 மனைவிகளிடம் எந்த விதமான போட்டியும், பொறாமையும் ஏற்படாத வகையில் அவர்களை எல்லாம் சரிக்கு சமமாக நடத்தி வருவதுடன், 8 மனைவிகளுடனும் சந்தோசமாக அவர் வாழ்ந்து வருவதாக அவர் பேட்டி அளித்து உள்ளார்.
இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகி பெரம் வைரலாகி வரும் நிலையில், பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதன் படி, “இன்னும் இவருக்கு கல்யாண ஆசை இருப்பதால், இந்த மனைவி வேட்டை தொடரும் போல் என்றே தெரிகிறது” என்று, பலரும் கருத்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.