• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

முத்தையா திரைக்கதையில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘டைகர்’: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

பகையே காத்திரு,பாயும் ஒளி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் நடிகர் விக்ரம் பிரபு அடுத்ததாக ‘டைகர்’ என்ற புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்குகிறார். திரைக்கதையும் வசனங்களையும் இயக்குநர் முத்தையா எழுதுகிறார். விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கிய ‘புலிக்குத்திப் பாண்டி’ வெளியானது குறிப்பிடத்தக்கது. ‘டைகர்’ படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. நடிகர் விக்ரம் பிரபு, முத்தையா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.