• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உச்சத்தில் உட்கட்சி மோதல் : தென்காசி மாவட்ட செயலாளருக்கு ஸ்கெட்ச்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து கொண்டு வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளை தீவிரம் காட்டி வருகின்றது.இந்நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக தென்காசி மாவட்ட செயலாளரை திமுகவினரை தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி சமீபத்தில் மாவட்டம் அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக கட்சியில் இருப்பதால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருப்பவர் சிவபத்மநாதன். மற்ற மாவட்டங்களை போல தென்காசி மாவட்டத்திலும் உட்கட்சி பூசல் கோஷ்டி மோதலுக்கு பஞ்சமில்லை.

ஏற்கனவே தென்காசி மாவட்டம் பிரித்த போது பூங்கோதை ஆலடி அருணாவிற்கும் சிவபத்மநாதனுக்கு ஏற்பட்ட மோதல் ஊர் அறிந்தது. இப்படி தன்னை சுற்றி வம்பு வளர்த்துகொண்டிருந்த மாவட்ட செயலாளருக்கு திமுக தலைமை ரீதியாக இணக்கமாக இருந்தாலும், மாவட்டதிற்குள் செயலாளரை தூக்குவதற்கு மாவட்ட திமுகவிற்குள் ஒரு கும்பல் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

கோஷ்டி மோதல் வாக்குவாதமாக இருந்து வந்த நிலையில் அதன் உச்சமாக அடிதடி தாக்குதலில் திமுகவினர் இறங்கி உள்ளனர். அமைச்சர் நிகழ்வில் கலந்து கொண்டு கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி திரும்பி உள்ளார். சங்கரன்கோவில் எம் எல் ஏ ராஜாவிற்கும் தனக்கும் எப்போதும் லடாய் என்பதால் தான் அமைச்சர் கலந்து கொள்ள இருந்த கூட்டத்தை கூட கடையநல்லூரில் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் முடித்து கொண்டு குத்துக்கல்வலசை அருகே டீ குடிப்பதற்காக வண்டியை நிறுத்தி விட்டு தனது சகாக்களுடன் டீ குடித்துள்ளார்.

அப்போது திடீரென்று அங்கு 20க்கும் மேற்பட்ட திமுகவினர் சிவபத்மநாதனை காருடன் சுற்றி வளைக்கத்தனர். டீக்கடை அருகில் இருந்த குப்பை தொட்டியை தூக்கி காரில் அமர்ந்து இருந்த சிவபத்மநாதன் மீது வீசினர். இதில் கார் கண்ணாடி உடைந்து சுக்கு சுக்காக நொறுங்கி போனது. அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து அனுப்பினர். கட்சியில் சீட் தரமால் புதியதாய் வந்தவர்களுக்கு சீட் கொடுத்ததால் இப்படி செய்ததாக கட்சியினரே ஒப்புக்கொண்டனர்.

மேலும் சிவபத்மநாதனுக்கு மாவட்ட ரீதியாக எந்த வித செல்வாக்கும் கிடையாது.அவர் விளம்பர பிரியர் சின்ன பத்திரிகை பெரிய பத்திரிகை என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பத்திரிகையிலும் தனது செய்தி படத்துடன் வர வேண்டும் விரும்புபவர். மாவட்டத்திற்குள் டெண்டர் ,கலெக்ஷன் ,கமிஷன் என்று சங்கரன்கோவில் எம் எல் ஏ ராஜாவை தலையிட விடாமல் அனைத்திலும் மூக்கை நுழைத்து பகையை வளர்த்துக்கொண்டார்.

மேலும் திமுகவிற்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே சிவபத்மநாதன் பக்கம் உள்ளது. அதனிடமும் விரோதம் வளர்த்து வைத்துள்ளார். மற்றபடி காங்கிரஸ் ,மதிமுக யாரும் இவரிடம் நட்பு கொள்வதில்லை. சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடாருக்கு வேலை பார்க்க கூறிய போது “அவருக்கெல்லாம் நான் வேலை பார்க்கனுமா” என்று மிடுக்காக கூறியதால் காங்கிரஸ் பலத்தையும் இழந்து தற்போது சொந்த கட்சியினரே கூட்டணி அமைத்து சிவபத்மநாதனை தூக்குவதற்கு திட்டம் தயாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் கோஷ்டி பூசல் காரணமாக நடந்ததா இல்லை. மாவட்ட செயலாளரே அனுதாப ஓட்டுக்காக இப்படி தயார் செய்ததா என்று சிலர் கிசு கிசுத்து வருகின்றனர். காரணம் கடையநல்லூரில் இருந்து திரும்பிய போது டீக்கடையில் திமுகவினர் எப்படி 20 பேர் வந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்காசியில் திமுகவிற்கு கஷ்டம் என்பதால் இந்த சூழ்நிலையை காரணம் காட்டி சிவபத்மநாதன் ஓரம்கட்ட திமுகவினர் ஆர்வமாக காத்திருகின்றனர்.