• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

நடிகை கஜோலுக்கு கொரோனா..!!

பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா பாசிட்டிவ் ( கோவிட் 19 பாசிட்டிவ்) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்! கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மகள் நியாசா தேவ்கனின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், நான் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. மிஸ் யூ நியாசா தேவ்கன் என பதிவிட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவரது சகோதரி தனிஷா முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.