• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி

நாடாளுமன்ற வளாகத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று பரவல். இந்தியா முழுவதும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா ஆகிய இரண்டு வகை வைரஸ்கள் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளன. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

குறிப்பாக டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பின்னர் பிப்ரவரி 1 ஆம் தேதி 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றி தொடங்கி வைக்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடக்கிறது.

மேலும் இரண்டாவது பகுதி கூட்டத்தொடர், மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 271 பேர் மாநிலங்களவையிலும் மற்றவர்கள் மக்களவையிலும் பணியாற்றுபவர்கள் ஆவர்.