• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காவல்துறை விசாரணைக்கு ஆஜராக திலீப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

மலையாள நடிகர் திலீப் கடந்த 2017ல் நடைபெற்ற நடிகை பாவனா கடத்தல்,பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார் கடந்த நான்கு வருடங்களாக வேகம் எடுக்காமல் முடங்கி கிடந்த இந்த வழக்கு வேகமெடுக்க தொடங்கியுள்ளது அதற்கு காரணம் நடிகர் திலீப் நண்பரும் இயக்குனருமான
பாலச்சந்திர குமார் என்பவர் அவருக்கு எதிராக திரும்பி, திலீப் ஜாமினில் வெளிவந்தபின் நடிகை கடத்தல் சம்பந்தமான வீடியோ கிளிப்புகளை பார்த்தார் என சில பரபரப்பான தகவல்களை சமீபத்தில் நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்தார்

இதனை தொடர்ந்து இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் திலீப் மீது புதிய வழக்கு பதிவுசெய்தனர். மேலும் திலீப்பை விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். நீதிமன்றமும் அதற்கான அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்று நினைத்த திலீப், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல், தனக்கு முன்ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன் கேரள உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். ஏற்கனவே நான்கு முறை இந்த முன் ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம் சனிக்கிழமை அந்த மனுவை விசாரித்தது.

இதனை தொடந்து நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், “இன்றிலிருந்து (ஞாயிறு) தொடர்ந்து மூன்று நாட்கள் திலீப் கேரளா க்ரைம் பிராஞ்ச் போலீசார் முன்பு விசாரணைக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நேரில் ஆஜராக வேண்டும். ஏதாவது காரணங்களை சொல்லி விசாரணைக்கு வராமல் தவிர்ப்பதோ, அல்லது வேறுவகையில் தனது செல்வாக்கை பயன்படுத்தினாலோ, அவருக்கு முன் ஜாமீன் கிடைப்பதை அது தடைசெய்துவிட வாய்ப்பிருக்கிறது..மேலும் திலீப்பிடம் செய்த விசாரணை குறித்து வரும் ஜன-27க்குள் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஜன-27 அன்று இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் நடக்கும்.. அன்றைய தேதி வரை திலீப்பை போலீசார் கைது செய்ய கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.