• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஒமிக்ரானின் முக்கிய அறிகுறிகள் என்னென்ன?

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது! பின் கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று மாறி மக்களை தாக்கி வருகின்றன. இந்த சூழலில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் Omicron என்ற பெயரில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் Omicron வைரஸின் முக்கிய ஆபத்தான அறிகுறிகள் குறித்து உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • Omicron தொற்று ஏற்பட்டவர்களில் 73 சதவீதம் பேருக்கு மூக்கு ஒழுகுதல் முதன்மை அறிகுறியாக உள்ளது. அது போல் 68 சதவீதம் பேருக்கு தலைவலி, குளிர் 30 சதவீதம் பேருக்கும், காய்ச்சல் 29 சதவீதம் பேருக்கும், தலைச் சுற்றல் 28 சதவீத பேருக்கு ஏற்பட்டுள்ளது.
  • Omicron-னின் அறிகுறிகள் உடல் சோர்வு 64 சதவீதம் பேருக்கும், தும்மல் 60 சதவீதம் பேருக்கும், தொண்டையில் தொற்று 60 சதவீதம் பேருக்கும், இருமல் 44 சதவீதம் பேருக்கும், தொண்டை கட்டுதல் 36 சதவீதம் பேருக்கும் பதிவாகியுள்ளது.
  • அதுபோல மூளை மழுங்கி போதல் 24 சதவீதம் பேருக்கும், சதை பிடிப்பு 23 சதவீதம் பேருக்கும் வாசனை இழப்பு 19 சதவீதம் பேருக்கும் நெஞ்சு வலி 19 சதவீதம் பேருக்கும் ஏற்பட்டுள்ளது என மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
  • அதாவது Omicron பாதிப்பு ஏற்பட்டவர்களில் அதிகம் பேருக்கு மூக்கு ஒழுகுதல் இருந்துள்ளது. அதே போல வெகு சிலருக்கு நெஞ்சு வலியும் ஒரு அறிகுறியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.