• Fri. Apr 26th, 2024

ஆஸ்கார் பட்டியலில் இணைந்த தென்னிந்திய படங்கள்!

ஆஸ்கார் விருது! உலக திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்! அத்தகைய ஆஸ்கார் விருது பட்டியலில் ஜெய் பீம், மரக்கார்: அரபிக்கடலின் சிங்கம்! உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் இடம்பெற்று, உலக சினிமாவை தென்னிந்தியா பக்கம் திருப்பியுள்ளது!

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்த உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலவிதமான விமர்சனங்களை பெற்றது. பல்வேறு விருதுகளிலும் பரிந்துரைக்கப்பட்டு வரும் ஜெய்பீம்.

ஐஎம்டியில் 9.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததோடு, ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகளும், இயக்குநரின் பேட்டியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது! இந்த சாதனையை படைத்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த அங்கீகாரத்தை ஜெய் பீம் படம் கொடுத்துள்ளது. .

மரக்கார்: அரபிக்கடலின் சிங்கம்! பிரியதர்ஷன் இயக்கிய இந்திய காலகட்ட போர்த் திரைப்படம். 16 ஆம் நூற்றாண்டின் கோழிக்கோடு, ஜாமோரின் கடற்படையின் அட்மிரல் முஹம்மது அலி என்ற நான்காவது குஞ்சாலி மரக்கரை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். அனி சசியை வைத்து பிரியதர்ஷன் இப்படத்தின் திரைக்கதையை அமைத்தார். மரக்காராக மோகன்லால் நடித்திருந்த இப்படத்தில், அர்ஜுன் சர்ஜா, சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், நெடுமுடி வேணு, சித்திக், முகேஷ் மற்றும் பிரணவ் மோகன்லால் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்! மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியான இப்படமும் பல்வேறு விமர்சனங்களை பெற்றது..

ஆஸ்கார் விருது!
இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியலில் சர்வதேச அளவில் 276 படங்கள். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த படங்களுக்கான வாக்கெடுப்பு வரும் 27ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் பீயிங் தி ரெக்கார்டோஸ், பெல்பாஸ்ட், கேண்டிமேன், கோடா, எண்கான்டோ, ஹவுஸ் ஆப் குச்சி, ஸ்பைடர் மேன் நோ வே ஹோம், வெஸ்ட் சைட் ஸ்டோரி, தி பவர் ஆப் த டாக் உள்ளிட்ட படங்களும், ஜப்பானின் டிரைவ் மை கார், இத்தாலியின் தி ஹேண்ட் ஆப் காட், ஈரானின் எ ஹீரோ, நார்வேயின் தி வொர்ஸ் பர்சன் இன் தி வேர்ல்ட் போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளன.

94வது ஆஸ்கர் விருது விழா
94வது ஆஸ்கர் விருதுகளின் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வரும் பிப்ரவரி 8ம் தேதி நாமினேஷன் அறிவிக்கப்படும். வரும் மார்ச் 27ம் தேதி விருது வழங்கும் விழா ஹாலிவுட்டின் டோல்பை திரையரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழா ஏபிசி தொலைக்காட்சியின் மூலம் 200 பகுதிகளில் உலகெங்கிலும் ஒளிபரப்பாக உள்ளது என்பது கூடுதல் தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *