• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பதவி விலகினாரா பி.டி.ஆர்?

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அந்த பதிவில் இருந்து விலகியுள்ளார் என்ற அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“கழக சட்டதிட்ட விதி: 31 – பிரிவு: 19 -ன் படி தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் நியமனம் தலைமைக் கழக அறிவிப்பு தி.மு.கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு. பி.டி.ஆர் . பழனிவேல் ராஜன், அவர்கள் அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக, கழகத் தலைவர் அவர்களிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

அவரின் அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, கழக சட்டதிட்ட விதி: 31 – பிரிவு : 19 – ன் படி அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக திரு. டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., ( எண். 1202, 6 வது அவென்யூ, ‘இசட்* பிளாக், அண்ணா நகர், சென்னை – 600 040.) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திமுக அயலக அணிச்செயலாளராக அப்துல்லா எம்பி நியமனம் செய்தும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.