• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசுக்கு டிமிக்கிக் கொடுத்த டாஸ்மாக் ஊழியர்கள்

Byகாயத்ரி

Jan 18, 2022

சட்டத்திற்கு புறம்பாக மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தை மதுக்கூர் கிரமா மக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

இன்று ஜன.18 ஆம் தேதி தைப்பூச திருநாள் என்பதால் மதுக்கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அரசின் ஆணைப்படி சட்டத்திற்கு புறம்பாக மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட மதுக்கூர் பகுதியில் இயங்கும் மதுபானக்கடைக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு தஞ்சையில் இருந்து வாகனம் ஒன்று நேற்று(17.01.2022) இரவு 9.30 மணிக்கு வந்தது . டாஸ்மாக் ஊழியர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மணிமுத்து வண்டியை பின்தொடர்ந்து வர, வண்டி கடைக்கு செல்லாமல் மதுக்கூர் வடக்கு கிராமத்தில் ஆள் நடமாட்டமில்லாத இருட்டு பகுதியில் வண்டியை நிறுத்தி விட்டு சரக்குகளை கீழே இறக்க ஆரம்பித்தனர் . இதை அவ்வழியே வந்த கிராம மக்கள் பார்த்துவிட்டு என்னவென்று விசாரிக்க வந்த போது டாஸ்மாக் கடை ஊழியர்களும், வாகனத்தில் வந்தவர்களும் 4 பெட்டி சரக்குகளை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

ஏதோ தவறு நடப்பதை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட கிராம மக்கள் 4 பெட்டி சரக்குகளையும் மதுக்கூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்து விவரத்தை கூறினர். காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது.களத்தில் இறங்கி விசாரித்ததில் டாஸ்மாக் கடை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி தனியாக ஆட்களை வைத்து வியாபாரம் செய்து வருவது தெரியவரந்தது. டாஸ்மாக் நிர்வாகமும் காவல்துறைஉயரதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்…