• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திடீரென மாற்றப்பட்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்

Byகாயத்ரி

Jan 17, 2022

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக பதவி வகித்த புவியரசன் மாற்றப்பட்டு, புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில், சென்னையில் சில மணி நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அத்துடன், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தால் பெருமழை குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் வழங்க இயலாத நிலை உள்ளது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி கடிதம் எழுதினார். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்து வந்த புவியரசன் மாற்றப்பட்டு, புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், செந்தாமரைக்கண்ணன் வகித்துவந்த காலநிலை மாற்ற இயக்குனர் பதவிக்கு புவியரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.