• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஊட்டியில் உள்ள “டைனோசர்” காலத்து தாவரம்!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 270 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை தாவரமான “ஜிங்கோ பைலபா”, சுற்றுலா பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நேபால் போன்ற நாடுகளிலிருந்து பல்வேறு வகையான மரங்களைக் கப்பல் மூலம் கொண்டுவந்து இங்கு அறிமுகம் செய்து நடவு செய்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அரிய வகை தாவரங்கள் உள்ளன. மாணவ மாணவிகள், தாவரவியல் ஆராய்ச்சி சார்ந்து படிப்பவர்களுக்கு இது பொக்கிஷமாக உள்ளது.

இந்நிலையில் ஊட்டியில் முக்கியமானதாகவும், மிகவும் அரியவகை மரமாகவும், இருப்பது. ஜிங்கோ பைலபா எனும் டைனோசர் காலத்து மரம். இது மிகவும் அரிதானது.

ஜிங்கோ பயலோபா 270 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரமாகும். சீனாவில் நடந்த தொல்லியல் ஆய்வின்போது நிலத்துக்கு அடியில் படிமமாக இந்த வகை மரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஜிங்கோ பேரினக் குடும்பத்தைச் சேர்ந்த ஜிங்கோ பைலோபா திசு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து சீனாவில் நடவு செய்து மீட்டுருவாக்கம் செய்தனர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரு நாற்றுகளும், ஊட்டி மரவியல் பூங்காவில் ஒரு நாற்றும் நடவுசெய்யப்பட்டுள்ளது. மிகவும் மெதுவாக வளரக்கூடிய இந்த வகை மரம்,  சுமார்  3000  ஆண்டுகள் வரை வாழக்கூடியது. காஷ்மீர் அல்லது இமாலயப் பகுதிகளைத் தவிர இந்தியாவில் சுமார் 5 மரங்கள் மட்டுமே இந்த வகை மரங்கள் இருக்கக்கூடும். இங்கிலாந்தில் உள்ள ராயல் கிங் தாவரவியல் பூங்காவில் இந்த வகை மரம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.