• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! – பார்வையாளர் ஒருவர் பலி!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் மூன்று சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மூன்று சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 22 பேர் காயமடைந்தனர்.

இரண்டு சுற்றுகள் முடிவில் 15 காளைகளை அடக்கிய முருகன் முதலிடமும் 10 காளைகளை அடக்கிய கார்த்திக் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். மாடு முட்டியதில் படுகாயமடைந்த 8 மாடுபிடி வீரர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வந்த மாடு நெஞ்சில் முட்டியதில், பார்வையாளர் பாலமுருகன் (18) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!