• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பரவலின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 12 ஆயிரம் பேருக்குமேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண் விஜய்,விஷ்ணு விஷால் நடிகைகளில் த்ரிஷா, மீனா உள்ளிட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ”கொரோனாவின் இரண்டு அலைகளில் தப்பித்தேன். தற்போது மூன்றாவது அலை என்னை பிடித்துவிட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், என்னை தனிமைப்படுத்திகொண்டேன்” என்று உறுதி செய்துள்ளார். குஷ்பு நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது.