• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தொகுப்பாளர் மாகாபா-வின் பாரிஸ் பயணம்

Byகாயத்ரி

Jan 5, 2022

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளரானார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தற்போது மாகாபா ஆனந்த் தான், தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் புத்தாண்டு அன்று பாரிஸுக்கு சுற்று பயணம் சென்றிருந்தார்.

ஆனால், மாகாபா ஆனந்த் குடும்பத்துடன் பாரீஸுக்கு சுற்றுலா செல்லவில்லையாம். மாகாபா, விஜய் டிவி பிரபலங்கள் சிலருடன் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஈவன்டுக்கு சென்றிருக்கிறார்.பாரீஸில் வசிக்கும் தமிழ் சமூகத்தினருக்கு நடத்தப்பட்ட இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் நடிகர் ரோபோ ஷங்கர், குக் வித் கோமாளி பாலா, சூப்பர் சிங்கர் சாம் விஷால் உள்ளிட்டோரும் பங்கு பெற்றுள்ளார்கள். இந்நிலையில், இந்த புத்தாண்டு நிகழ்வின் நுழைவு கட்டணம் 85 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 7200 ரூபாயாம்.