• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தீர்ப்புகள் விற்க்கப்படும் சிறப்பு பார்வை

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் உள்ளது. அந்த எண்ணத்தின் அடிப்படையில் ஒரு அதிரடியான கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தீரன்.

சத்யராஜ் ஒரு அரசு மருத்துவர். அவரது ஒரே மகள் ஸ்மிருதி வெங்கட் ஒரு மருத்துவ மாணவி மகள் ஸ்மிருத்திக்கும் டாக்டரான யுவன் மயில்சாமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்மிருத்தியை மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். தன் மகளுக்கு நேர்ந்த இந்த பெரும் கொடுமையை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார் சத்யராஜ். ஆனால், அந்த மூன்று இளைஞர்களில் ஒருவரது அப்பாவான கோடீஸ்வரர் மதுசூதனன் அவரது பண பலத்தால் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறார். இதனால், ஆத்திரமடையும் சத்யராஜ், அந்த மதுசூதனின் மகனைக் கடத்தி, அவரது ஆண் உறுப்பை ஆபரேஷன் செய்து எடுத்து விடுகிறார். அந்த உறுப்பைத் தர வேண்டுமென்றால் சில கொலைகளைச் செய்ய வேண்டும் என மதுசூதனனுக்கு நிபந்தனை வைக்கிறார் சத்யராஜ். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் தடுமாற்றம் இருந்தாலும் அதன்பிறகு காட்சிகள் விறுவிறுப்பாகவே நேர்கோட்டில் தடுமாற்றம் இன்றி நகர்கின்றன. இப்படி ஒரு தண்டனையை இதுவரை எந்த ஒரு ஹீரோவும் வில்லனுக்குக் கொடுத்ததில்லையே என்பதுதான் படத்தின் சுவாரசியம்.சத்யராஜ் தன் மகள் ஸ்மிருதி மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார். தாய் இல்லாத மகளை, அன்பாக வளர்த்து அவரையும் டாக்டராக்கி, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு சராசரி அப்பவாக பாசக் காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார். அதே சமயம் பழி வாங்கல் எண்ணம் வந்ததும் வழக்கமான சத்யராஜை படத்தில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் பார்க்க நேரடியாக யாருக்கும் எந்த தண்டனையும் கொடுக்காமல் எதிராளிகளின் மூலமாகவே அவர்களுக்குள் அவர்களை அடிக்க வைக்கும் திரைக்கதையுக்தி தனி ஹீரோயிசம் தான்.

அன்பான மகளாக ஸ்மிருதி வெங்கட். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். அவரைக் காதலித்து கை பிடிக்க நினைக்கும் கதாபாத்திரத்தில் யுவன் மயில்சாமி. மெயின் வில்லனாக மதுசூதனன். படம் முழுவதும் வருகிறார். அவருக்கு உறுதுணையாக ஹரிஷ் உத்தமன். ஒரு காலத்தில் பல படங்களில் வில்லனாக கலக்கிய சத்யராஜின் முன் இவர்களது வில்லத்தனம் தடுமாறத்தான் செய்கிறது. சார்லி, ரேணுகா ஆகியோரும் படத்தில் உண்டு.தீர்ப்புகள் விற்கப்படும்’ என்பது படத்திற்குப் பொருத்தமான தலைப்புதான்.
பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு இந்தப் படத்தில் காட்டப்படும் கடும் தண்டனைகளை சட்டப்படி நிறைவேற்றினால் அந்தக் கொடுமைகள் கண்டிப்பாகக் குறையும். குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் சரியான பயம் வரும்.

தீர்ப்புகள் விற்க்கப்படும் வரவேற்கப்பட வேண்டும்

பெயர்:தீர்ப்புகள் விற்கப்படும்
தயாரிப்பு – அல் டாரி மூவீஸ்
இயக்கம் – தீரன்
இசை – SN பிரசாத்
நடிப்பு – சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட்
வெளியான தேதி – 31 டிசம்பர் 2021