• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இளம் சிறார்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி முகாம்..!

Byகுமார்

Jan 3, 2022

தமிழக அரசின் ஆணைப்படி 15 முதல் 18 வயது நிரம்பிய பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


இந்த முகாமில் பள்ளிஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் டாக்டர் வேல்விழி, டாக்டர். ராபின் தலைமையில் செவிலியர்கள் சிறப்பாக ஈடுபட்டனர். மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முன்னர் சுவையான காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

பள்ளியிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியமைக்காக மாண்புமிகு பாரதப் பிரதமர், மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகயோருக்கும் முகாமை சிறப்பாக நடத்திய மருத்துவக் குழுவினருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.