• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரியில் கொரோனா பரவினால் முதல்வர்தான் காரணம் – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்தால் முதல்வர் ரங்கசாமிதான் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.


புதுச்சேரியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தொற்று அதிகரித்தால் முதல்வர் ரங்கசாமிதான் பொறுப்பேற்க வேண்டுமென கூறியுள்ளார்.


தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒமிக்ரான் பரவல் ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படுபவர்களை காக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை என குறிப்பிட்டார். முதல்வர் கேட்கும் நிதியை கொடுக்காமல் அவரின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு புதுச்சேரியை வஞ்சிக்கிறது என்றும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.