• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தேனியில் விசிக ஆர்ப்பாட்டத்தின்போது இந்து அமைப்பினருடன் கடும் வாக்குவாதம்..,

ByAjmalkhan saleemraja

Nov 28, 2026

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, இந்து அமைப்பினரின் வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே மகளிருக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தேனி பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அவ்வழியாகச் சென்ற இந்து அமைப்பினரின் வாகனத்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விசிகவினர் வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, வாகனத்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.