விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அரசு நடுநிலைப்பள்ளியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆசிரியைகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்



