• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கும் மசோதாவைக் கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByAjmalkhan saleemraja

Nov 28, 2026

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சட்ட மசோதாவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மாநில செய்தித் தொடர்பாளர் பாவலன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சட்ட மசோதாவால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், வட மாநிலங்களுக்கு கிடைக்கும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு இணையான பிரதிநிதித்துவம் தென் மாநிலங்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

எனவே, மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்கும் சட்ட மசோதாவைக் கைவிட வேண்டும், மகளிருக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.