• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

நம்பிக்கை விடாமுயற்சி மூலம் அறப்பணிகள் செய்ய வேண்டும் கருப்பையா எம்.எல்.ஏ.,பேச்சு..,

லண்டன்சாம்ஸ் கூட்ட அரங்கில் தாயுமானவர் அறக்கட்டளை துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ., பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முத்தமிழ் சங்கம் வளர்த்த பழமையும் பெருமையும் வாய்ந்த அன்னை மீனா ட்சி அருள் ஆட்சி புரியும் மாமதுரை யில் வாவிட மருதூர் என்னும் சிற்றூ ரில் பிறந்தவன் தான் இந்த எம். வி. கருப்பையா.

சிறுவயதில் இருந்து வறுமை காரணமாக பல்வேறு கஷ்டங்களையும் இடர்பாடுகளையும் சந்தித்த நான் என்னைப் போல பிறர் கஷ்டப்படக் கூடாது என்ற தொண்டுள்ளம் கொண்டதால் அப்போது முதல் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டேன். அதனால் தொடர்ந்து என்னால் இயன்ற பல்வேறு அறப்பணிகள் செய்து வந்தேன்.

அதன் பலனாக முதல் முதலில் 2011ஆண்டு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டேன். அன்று முதல் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்,தெரு விளக்கு,,வடிகால் சீரமைப்பினை முதன்மையாகக் கொண்டு மக்களின் தேவை அறிந்து செயல்பட்டேன்.

அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தேன் அதன் பலனாக மீண்டும் தற்போது 2026ஆண்டு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதல்வர் தளபதி ஜோசப் விஜயின்கருணை உள்ளத்தால்தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசின் தற்காலிக சபாநாயகராக பொறுப் பேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தேன். மேலும் தமிழ்நாடு அரசு சட்டமன்ற நூலக குழு உறுப்பினராகவும்பணி செய்து வருகிறேன்.

*ஒருமைகண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்பு டைத்து” என்ற வான்புகழ்வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்றபடி மனிதப் பிறப்பில் ஒரு முறை ஒருவர் படித்து விட்டால் அந்த கல்வி ஏழு தலை முறைக்கும் பயனை தரும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக நீங்கள் எல்லாம் லண்டன்வந்து தாய்மொழி தமிழை கண்களாக மதித்து வாழ்ந்து வருவதில் பெருமை கொள்கிறேன்.

இந்த உலகில் தமிழுக்கும் தமிழனு க்கும் தனிச்சிறப்பு உண்டுஎன்பதற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக
தாயுள்ளம் கொண்டு தாயுமானவர் அறக்கட்டளையை உருவாக்கியுள்ள உங்கள் அனைவருக்கும் என் கோடான கோடி நன்றி.

“விதைத்துக் கொண்டே இருப்போம் முளைத்தால் மரமாகட்டும் இல்லை என்றால் உரமாகட்டும்”என்ற நம்மாழ்வாரின் பொன்மொழிக்கு ஏற்றபடியும், நம்பிக்கை விடாமுயற்சி மூலம் தொடர்ந்து அற பணிகளை செய்ய வேண்டும்.

இந்த அறக்கட்டளைக்காக வரையப்பட்ட இந்த ஓவியத்தை பார்க்கும் போது உலகம் சமநிலை பெற வேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும். நிறைவே காணும் மனம் வேண்டும்.இறைவா அதை நீ தர வேண்டும் என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

இந்தப் பாடலில் கூறியுள்ளது போல் படத்திலும் ஏற்றத்தாழ்வு என்று ஏழை பணக்காரர் என்று பாகுபாடு இல்லா மல் சமமாக அனைவரும் அமர்ந்து காட்சியளிப்பது கண்க ளுக்கு விருந் தாக இருக்கிறது.

“ஒரு துளியாலே, உயிர் உருவாகும். உன் உடல் கூட்டில் அது கொண்டாடும் பிறப்புக்கும,இறப்புக்கும் இடை நின்றாடும் வாழ்க்கை மேகம் நிலையின்றி போகும் என்பதற்கு ஏற்றபடி ஒருமுறை பிறப்பு ஒரு முறை இறப்பு என்பதை மனதில் கொண்டு தனித்து வத்தோடுதாயுமானவர் அறக்கட்டளை தொடங்கி மக்கள் தொண்டு செய்ய முன்வந்துள்ள உங்கள் அனைவருக் கும் வாழ்த்துக்களையும் பாராட்டு களையும் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகின்றேன் இவ்வாறு அவர் பேசினார்.