• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Nov 27, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 31 ஊராட்சிகளில் இருந்து எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் மூலம் ஒப்பந்த பணிகளை செய்த ஒப்பந்ததாரர்கள் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தின் கீழ் பணி செய்ததற்கு செலவிட்டுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதையும்,

மேலும் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்து விட்ட பின்பு ஒப்பந்தத்துக்கான எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது என்றும், ஒப்பந்ததாரர்கள் அனைவரும் கடன் சுமையில் தவித்து வருவதாகவும் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் சுமார் 14 கோடி 50 லட்சம் நிதி வராமல் உள்ளதாக குற்றம் சாட்டினர்.,

மத்திய மாநில அரசுகள் நிதி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், இந்த நிதியானது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மாற்றப்பட்டு விபி ராம்ஜி திட்டத்தின் நிதி வழங்காமல் காலதாமதம் செய்து வருவதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,

தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரஸ்வதி- யிடம் மனு அளித்து நிலுவைத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இதே நிலை நீடித்தால் நிலுவைத் தொகை கிடைக்கும் வரை குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.,