• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

பெங்களூருவில் ஜனவரி 21 முதல் 27 வரை இம்டெக்ஸ் கண்காட்சி..,

BySeenu

Nov 27, 2026

இந்திய இயந்திரக் கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், ஆசியாவின் முன்னணி இயந்திரக் கருவிகள் மற்றும் உற்பத்தித் தொழில்நுட்பக் கண்காட்சியான இம்டெக்ஸ் (IMTEX 2027),கண்காட்சி, பெங்களூருவில் ஜனவரி 21 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சண்முக சுந்தரம்,ஜி.டி்ராஜ்குமார்,குரு பிரசாத் ஆகியோர் பேசினர்…

IMTEX கண்காட்சி 22-வது ஆண்டாக நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில், உலோக வெட்டும் இயந்திரங்கள், உயர் துல்லிய CNC இயந்திரங்கள், தானியங்கி உற்பத்தி முறைகள், ரோபோட்டிக்ஸ், முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம், நவீன தொழிற்சாலைத் தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும், தரப் பரிசோதனை, அளவீட்டுத் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகள் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளும் இடம்பெற உள்ளன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நவீன தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உள்ளன.

இந்திய இயந்திரக் கருவிகள் உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. 2025–26 நிதியாண்டில் இத்துறையின் உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகரித்து, சுமார் ரூ.17,387 கோடியை எட்டியுள்ளது. இது இந்திய உற்பத்தித் துறையில் நவீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், தொழில்துறையினருக்கு புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் IMTEX 2027 கண்காட்சி முக்கியத் தளமாக அமையும். குறிப்பாக, எதிர்கால உற்பத்தித் துறைக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை அறிந்துகொள்ள இந்தக் கண்காட்சி உதவும் என, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…