• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 72 வது பிறந்தநாளை தபெதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்…

BySeenu

Nov 26, 2026

கோவை, காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் , விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனின் 72 வது பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது. தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ,கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பிரபாகரன் புகைபடத்துடன் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். பின்னர் பேட்டியளித்த தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன்,
பிரபாகரனின் 72 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதாகவும், தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று போராடியவர் பிரபாகரன் எனவும் , ஆயிரக்கணக்கான இளைஞர்களை தனிநாட்டிற்காக போராட வைத்தவர் எனவும், கொள்கைக்காக இறுதி வரை போர் களத்தில் இருந்தவர் பிரபாகரன் என தெரிவித்தார்.

தான் விரும்பிய நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை தமிழீழ மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அவர் எனவும், பிரபாகரனின் லட்சியம் நிச்சயம் நிறைவேறும், தமிழீழம் நிச்சயம் மலரும் எனவும் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்….