• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கல்குவாரி பணத்தைக் கேட்டதால் கொலை மிரட்டல்..,

ByAjmalkhan saleemraja

Nov 26, 2026

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தங்கம் என்பவர், தனது மகனுக்குச் சொந்தமான கல்குவாரியை மீட்டுத் தரவும், குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு கம்பம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தங்கத்தின் மகனுக்குச் சொந்தமான கல்குவாரியை 4 லட்சம் ரூபாய்க்கு வாங்குவதாகக் கூறி, 15 ஆயிரம் ரூபாய் மட்டும் முன்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், மீதமுள்ள தொகையை வழங்காமல், கடந்த 14 ஆண்டுகளாக கல்குவாரியில் கற்களை உடைத்து விற்பனை செய்து வருவதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், மீதிப் பணத்தைக் கேட்டபோது பணத்தைத் தர மறுப்பதுடன், அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது மீண்டும் கல்குவாரியில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தமக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிய தங்கம், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, உயிருக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், கல்குவாரியை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.