• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

ஜி.கே.என்.எம்.மருத்துவமனை சார்பில் நுரையீரல் உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்கு சிறப்பு மையம்..,

BySeenu

Nov 26, 2026

கோவை, நவ.26 கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் நாள்பட்ட ரத்த உறைவால் ஏற்படும் நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் (சி.டி.இ.பி.எச்.) நோய்க்கான விரிவான ஒருங்கிணைந்த சிகிச்சை திட்டத்தை அறி முகப்படுத்தியுள்ளது.

நோயாளிகளுக்கு முழுமையான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வழங்குவதை நோக்கமாக கொண்டு, இதய-நுரையீரல் அறுவை சிகிச்சை, இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி, நுரையீரல் உயர் ரத்த அழுத்த சிகிச்சை, மேம்பட்ட இமேஜிங் பரிசோதனைகள், மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை ஆகிய பல்வேறு துறைகளின் நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.

இதில் இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் சம்பசிவம், இதய-நுரையீரல் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் வெங்கடதேவநாதன், இதய செயலிழப்பு சிகிச்சை பிரிவு மற்றும் எக்கோ கார்டியோகிராபி தலைமை ஆலோசகர் டாக்டர் சண்முக சுந்தரம், இதய-நுரையீரல் அறுவை சிகிச்சை ஆலோ சகர் டாக்டர் ராகேஷ் சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.