தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியான கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மத்திய கூட்டுறவு வங்கி முன்பு விவசாய சங்கத்தினர் தமிழக அரசு விவசாயிகளின் கூட்டு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்பதை ரத்து செய்ய கோரியும், 30.04.2025 க்கு முன்பு நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,

இதில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியான கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், எவ்வித நிபந்தனையும் இன்றி அனைத்து கூட்டுறவு பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
இதில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், 58 கிராம பாசன விவசாய சங்கத்தினர், மேலூர் விவசாய சங்கத்தினர், மற்றும் வாடிப்பட்டி விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.,

மேலும் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றால் விவசாய சங்கத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.,


