மதுரை மாவட்டம் செக்காணூரணி காவல் நிலையத்தில் கடந்த 3 ஆம் தேதி லாரியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக தேனி மாவட்டம் தேவாரம் அருகே அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்தவர், 14 ஆம் தேதி அதிகாலை காவல் நிலையத்தில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,

இந்த சம்பவம் தொடர்பாக செக்காணூரணி காவல் நிலையத்தில் நடுவர் நீதிமன்ற நீதிபதி, சிபிசிஐடி போலீசார், மதுரை மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் என கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.,

இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை வாங்க மறுத்து வந்த நிலையில் இன்று நான்கு நாட்களுக்குப் பின்பு பாலகிருஷ்ணன் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்தில் பாலகிருஷ்ணன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பாலகிருஷ்ணன் சொந்த ஊரான தேனி மாவட்டம் அழகர் நாயக்கன்பட்டிக்கு நல்லடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.,
இந்நிலையில் இன்று லாரியில் தீவிபத்து ஏற்பட்டதாக ஓட்டுநர் பாலகிருஷ்ணன் புகார் அளித்த வாலாந்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல்துறையின் விசாரணையின் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகுமார் தலைமையிலான போலீசார், வாலாந்துர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.,
