• Tue. Nov 17th, 2026

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..,

ByK Kaliraj

Nov 17, 2026

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் திடீர் சோதனையினால் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பரபரப்பு

கோயில் அலுவலகத்தை பூட்டிக்கொண்டு உள்ளே சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 60 கோடி மதிப்பில் பல்வேறு திருப்பணிகளின் நடைபெற்றன.

அந்த பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை ஈடுபட்டு வருவதாகவும், முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் அதிகப்படியான பணம் வசூல் செய்யப்படுவதாக புகார் வந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனையில் கோவிலின் அறங்காவலர் ராம மூர்த்தியிடம் தனியறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது