• Sun. Nov 15th, 2026

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி..,

BySeenu

Nov 15, 2026

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சூரசம்கார நிகழ்வை நேரில் கண்டு களித்தனர்.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று பல்வேறு முருகன் கோவில்களில் விமர்சையாக நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சூரசம்கார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைக் காண்பதற்கு கோவை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். குறிப்பாக சஷ்டி விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து படிகட்டுகள் வழியாக மலைகோவிலுக்கு சென்று சூரசம்கார நிகழ்வை நேரில் கண்டு களித்தனர்.

சூரசம்காரம் மற்றும் நாளை நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு பக்தர்களின் வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக அனுமதிக்கப்பட்டனர் அதே சமயம் கோவில் நிர்வாகம் தரப்பிலும் சிறப்பு பேருந்துகள் மலைக்கோவிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது ஆங்காங்கே தற்காலிக கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சூரசம்காரம் நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சூரசம்ஹார நிகழ்விலும் பங்கேற்று கோவில் நிர்வாகிகள் உடன் சூரனின் தலையை கொய்தார்.

சூரசம்கார நிகழ்வைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.