• Sun. Nov 15th, 2026

அறந்தாங்கி ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்..,

ByS. SRIDHAR

Nov 15, 2026

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல், அறந்தை நிவாரண குழு அறக்கட்டளை, புதுக்கோட்டை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண்மருத்துவனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் அலி ஜைனம் ஜமாத் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் டிஏஎன்.பீர்சேக் தலைமையில் பொருளாளர் தாவுத் சுல்தான், நிவாரண குழு துணைத் தலைவர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலையில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழு பொதுமக்களுக்கு கண் சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாமை நடத்தி வைத்தனர்.

நிவாரண குழு அறக்கட்டளை தலைவர் அப்துல்லாஹ் முகாமை துவக்கி வைத்தார். முன்னதாக ஜமாத் முத்தவல்லி முஜிபுர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் நிவாரண குழு அறக்கட்டளை செயலாளர் ஒருங்கிணைப்பாளர் பரக்கத் அப்துல் கனி அனைவருக்கும் நன்றி கூறினார்.

500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்ற இந்த முகாமில் கண்புரை, சதை வளர்ச்சி, நீர் அழுத்தம், நீர் வடிதல், கண்வலி மற்றும் தலைவலி எரிச்சல்,பார்வை போன்ற பிரச்சனைகளுக்கு ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில் கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய 50 நபர்கள் உடனடியாக மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். போக்குவரத்து, தங்குமிடம், அறுவை சிகிச்சை, மருத்து, மாத்திரைகள் என அனைத்தும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி பொருளாளர் முனைவர் முபாரக் அலி, நகர்மன்ற உறுப்பினர் தீன், மேற்பணைக்காடு ஊராட்சி உறுப்பினர் முகமது மூஸா, இடையன்காடு ரியாஸ் அஹமது ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.

பொதுமக்களால் பெரும் பாராட்டை பெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாமை அறந்தாங்கி ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அறந்தை நிவாரண குழு அறக்கட்டளை உறுப்பினர்கள் சிராஜ், அசாருதீன், அன்வர்பாட்சா, முகம்மது ரபீக் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.