மதுரை மாவட்டம் சோழவந்தானில் 18 வார்டுகள் உள்ளது ஒவ்வொரு வார்டிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சியின் 16 வது வார்டு பகுதியான கீழ பச்சேரி மேலபச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அடிப்படை பணிகளையும் செய்யாததால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி தெருக்களில் ஆறாக ஓடுகிறது.

மேலும் வடிவேல் பட காமெடி போல் கிணத்தை காணோம் என்ற கதையாக
கழிவுநீர் கால்வாய் கட்டியதாக கூறி பேரூராட்சி பணத்தை முறைகேடு செய்துள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. மேலும் குடிநீரும் கருப்பு மற்றும் மஞ்சள் கலரில் வருவதால் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் வார்டு கவுன்சிலரின் வீட்டிற்கே சென்று நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியும் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் பல இடங்களில் மின்விளக்குகளும் எரியாத நிலையில் தெருக்களில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் மின்சார துறை அதிகாரிகள் ஆகியோர் மேலப்புச்சேரி கீழப்பச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கழிவு நீர் தேங்கி கிடக்கும் பகுதிகளை பார்வையிட்டு கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சரி செய்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
