விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் போலீசார் வனமூர்த்தி லிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பாக காருடன் இருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்து சந்தேகத்தின் பேரில் காரை போலீசார் சோதனை நடத்தினார்.

அப்போது காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள், குட்கா மூடைகள், இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் காரில் இருந்த தென்காசி மாவட்டம் கடகனேரி தாலுகா வெங்கடேஸ்வர புரம் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (வயது 54), சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் நடுத்தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 29) இருவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து காரில் இருந்த 372 கிலோ எடையுள்ள 50 புகையிலை மூடைகள், குட்கா இரண்டு மூடைகள் மதிப்பு ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஆகும்.மற்றும் புகையிலை மூடைகள் கொண்டு வரப்பட்ட காரையும் உடனடியாக பறிமுதல் செய்தனர்.
