• Thu. Nov 12th, 2026

சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் அறிக்கை கேட்டிருப்பது கண்டனத்திற்குரியது..,

ByS. SRIDHAR

Nov 12, 2026

உள்துறை அமைச்சகம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் அறிக்கை கேட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஆளுநர் வைத்து அமித்ஷா அரசியல் செய்வது சரியல்ல ஜனநாயகத்துக்கு உகந்தது கிடையாது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை முதல்வர் கண்டிப்பாக எடுப்பார் அதற்காக whatsapp செய்தியை நம்பி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தான் நான் கூறினேன் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதை காங்கிரஸ் எதிர் கொள்வதற்கு தயாராக உள்ளது.

தமிழக வெற்றி கடக அரசு 118 இடங்களை பெற்றாலும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை உறுதிப்படுத்துவார்… புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஆளுநர் மூலமாக அறிக்கை வாங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. இப்படிப்பட்ட செயல் இதுவரை நடந்தது கிடையாது

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆளுநரிடம் அறிக்கை வாங்கி இருப்பது ஆபத்தானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மீது அழுத்தத்தை கொடுப்பதற்காக அமித்ஷா அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. இப்படிப்பட்ட செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முழு மெஜாரிட்டி இருக்கிறது. இந்த அரசை பொருத்தவரை தன்னுடைய திட்டங்களை செய்து வருகிறது. குற்ற எண்ணிக்கைகளை குறைத்து வருகிறது.

மாவட்டம் வாரியாக சென்றாண்டு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குற்றங்கள் நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு எந்தெந்த மாதங்களில் என்னென்ன குற்றங்கள் நடைபெற்று இருக்கிறது என்பதை வெளியிட வேண்டும்..

கள்ளக்குறிச்சி எம் எல் ஏ விவகாரத்தில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் எந்தவிதமான புகாரும் இல்லாமல் வெறும் whatsapp செய்தியை நம்பி நாம் எந்த முடிவுக்கு வந்துவிட முடியாது என்று தான் நான் கூறினேன் என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது

யார் மீது குற்றச்சாட்டு வைத்தாலும் சரி தமிழ்நாடு காவல்துறை எந்த ஒரு பாரபட்சமா பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறது யாருடன் கண்ட்ரோலும் இல்லாத காவல்துறை. காவல்துறைய ப்ரொபஷனலாக ஆக்கக்கூடிய நடவடிக்கையில் அமைச்சர் எடுத்த வருகிறார் குற்றச்சாட்டு என்று வந்தால் நடவடிக்கை எடுப்பார்.

அந்த எம்எல்ஏ என்னுடைய மொபைல் போனை தருகிறேன் நீங்கள் செக் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டார்.

யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் சட்டத்திற்கு முன்னால் கொண்டு வர வேண்டும். குற்றச்சாட்டு என்று வந்த பிறகு தான் பேச வேண்டும்.

வாட்ஸ் அப்பில் வரும் தகவலை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது குற்றச்சாட்டு உறுதியானால் நடவடிக்கை எடுக்கலாம்.

கடந்த காலங்களை பார்க்கும் போது தற்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது குறைந்துள்ளது இந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக தான் நடைமுறைக்கு வரும். தமிழக வெற்றிக்கான அரசிற்கு 118 எம்எல்ஏக்கள் வந்தாலும் முதல்வர் விஜய் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை உறுதிப்படுத்துவார்.

காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீண்டும் பெரும்.

புதுக்கோட்டையில் இன்று நடந்த ஒருங்கிணைப்பாளர் பயிற்சி பட்டறை என்பது ஒரு திருப்புமுனையாக காங்கிரசுக்கு இருக்கும்.

இந்த அரசுக்கு வர வேண்டிய நிதி எல்லாம் கடந்த காலங்களில் வெளியே சென்று கொண்டிருந்தது தற்போது தமிழக அரசின் கஜானாவிற்கு வருவதற்கு உண்டான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

நேர்மையாக அமைச்சர்களாக நேர்மையாக அரசாக இது உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் காங்கிரஸ் ரெடியாகத்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு தான் இந்த கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதற்கான காலம் மலையறிவிட்டது. ஆட்சி கலைப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அவர் இதுவும் வாட்ஸ் அப் செய்தி அது போன்று எதுவும் நடக்காது.