• Thu. Nov 6th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

2021 -இன் சமூக வலைத்தளங்களில் வைரல் மொமெண்ட்ஸ்!

கோவிட்!

இந்த வார்த்தைக்கு அர்த்தம் வேண்டுமா? ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்த கொடிய நோய், கொரோனா! இன்றளவும், பல்வேறு மரபணு மாற்றங்களை பெற்று, சமூக வலைத்தளங்களில் வைரல் இடத்தில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது! இந்த வருடம் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்ட் ஆன வார்த்தை கோவிட்!

விவசாயிகள் போராட்டம்!

மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக 2020-ஆம் ஆண்டு தொடங்கிய விவசாயிகளின் ஓர் ஆண்டுக் கால போராட்டத்திற்கு இறுதியாக சில வாரங்களுக்கு முன்புதான் முழுமையான தீர்வு கிடைத்தது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்! கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடங்கிய போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல தரப்பில் ஆதரவு கிடைத்தது! மேலும் நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்! அவ்வகையில் சமூகவலைத்தளங்களில் இந்திய அளவில், அதிகம் ட்ரெண்ட் ஆனது, விவசாயிகள் போராட்டம்!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டேக்கியோ ஒலிம்பிகே போட்டிகள், 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது! இந்தியாவிற்கான ஒரு பொக்கிஷமாக அமைந்தது இந்த ஒலிம்பிக்ஸ்! முதல்முறையாக தங்க பதக்கத்தை பெற்று, இந்தியாவின் தங்கமகன் என்ற பட்டதைப் பெற்றார் நீரஜ் சோப்ரா! 2021 ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கத்தோடு 7 பதக்கங்களும், பாராலிம்பிக்கில் 5 தங்கத்தோடு இரட்டை இலக்கத்தில் பதக்கங்களைப் பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது! மேலும், சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் வரிசையிலும் இடம் பெற்றது!

ஐபிஎல்!

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர்! இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக, சில கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் இன்றி இந்தியாவிலேயே நடைபெறும் என அறிவித்தது பிசிசிஐ. முதல் பாதி மட்டும் இந்தியாவில் நடைபெற, கொரோனா காரணமாக மீண்டும் அரபு நாடுகளில் பிற்பாதி போட்டிகளை நடத்தி முடித்தது. இத்தொடரில் ‘தல’ தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

மாஸ்டர் & வலிமை


இளைய தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் மாஸ்டர்! சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ட்ரெண்டானது! அதேபோல், நடிகர் அஜித்குமார் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’! பொங்கலன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரைலர், டிசம்பர் 30ம் தேதி மாலை 6.30க்கு வெளியானது! வெளியான 10 நிமிடங்களில், 10 லட்சம் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது! தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியீட்டின் போது இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தை களேபரமாக்குவது அனைவரும் அறிந்ததே!

பிட்காயின்


சமீப காலத்தில் அதிகமாகப் பேசப்பட்ட வைரல் விஷயங்களுள் ஒன்று பிட்காயின். சமூக வலைத்தளங்களில் பிட்காயின் குறித்தான கட்டுரைகளும், தகவல்களும் அதிகளவில் ட்ரெண்ட் ஆகின! மேலும் இதனை அடிப்படையாக கொண்டு பல மீம்ஸ்களும் வெளியானது!

சமூக வலைத்தளங்கள் தகவல் பரிமாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது! அவற்றில் வைரலாகும் செய்திகள் பல! அதில் ஒரு தொகுப்பு தான் இது!