அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திருத்தங்களில் உள்ள தனது இல்லத்தில் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்களில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது குடும்பத்தினர் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடினார். மேலும் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து பெற்றனர்.