• Sun. Nov 8th, 2026

மாணவ, மாணவிகளுடன் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் கீர்த்தனா…

ByK Kaliraj

Nov 8, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேரில் சென்று ஆதரவற்ற மாணவ, மாணவிகளிடம் தீபாவளி பட்டாசுகள் வழங்கி, அவர்களுடன் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு அசைவ உணவுகள் வழங்கி அவர்களுடன் இணைந்து உணவு அருந்தினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் கண்டு ரசித்தார்.

நிகழ்ச்சியில் சிவகாசி மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், புலிப்பாறைபட்டி மணிகண்டன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.