• Fri. Nov 6th, 2026

சோழவந்தான் தொகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கிய கருப்பையா எம்.எல்.ஏ.,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,வாடிப்பட்டி பேரூராட்சி, சோழவந்தான் பேரூராட் சி, அலங்காநல்லூர் பேரூராட்சி பால மேடு பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்,

துப்புரவு பணியாளர்கள்,குடிநீர் நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள்,மக்கள் நல பணியாளர்கள், நூலகர்கள், பணித் தள பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு தமிழ் நாடு முதலமைச் சர் ஜோசப் விஜய் நல்லாட்சியில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்நிலைத் துறை அமைச்சர் புஸ்ஸிஆனந்த் வழிகாட்டுதல்படி தீபாவளி புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு எம். வீ. கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கினார். உடன் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள்,பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.