• Wed. Nov 4th, 2026

மறமடக்கி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி..,

Byமுகமதி

Nov 4, 2026

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் இலக்கிய ஆர்வம் , கவிதையாற்றல் மற்றும் மொழித்திறனை வளர்க்கவும் தமிழ்மொழி , இலக்கியம் மற்றும் பண்பாட்டை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் ஒரு முக்கியமான இலக்கிய நிகழ்வு தமிழ்க் கூடலாகும்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் சி. தங்கமணி தலைமை தாங்கினார். தமிழ்மொழியின் வரலாறு, சிறப்பு, தமிழ்மொழி தோன்றிய விதம், தமிழ் கற்பதால் ஏற்படும் மகிழ்ச்சி, இலக்கிய நூல்கள் தமிழ்ப் புலவர்கள் பற்றி கவிஞர் தமிழ்ச்செம்மல் ரமா இராமநாதன் இலக்கியச் சிறப்புரையாற்றினார். பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆர்னிகன் மற்றும் மேனகா ஆகியோர் தமிழ்க்கூடல் நிகழ்வு பற்றி மாணவர்கள் சார்பாக சிறப்பாக பேசினார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சி.அண்ணாத்துரை , பள்ளியின் மேலாண்மைக்குழுத் தலைவர் சுப.அழகர்துரை , முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி. கலைச்செல்வி மதியழகன் , முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி. இராஜமனோகரிரவி, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் இரா. அன்பரசு, பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவர் திருமதி. க. மகேஸ்வரி, பள்ளி ஆலோசகர் வ.மு.ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்க் கூடல் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

முன்னதாக வந்திருந்த அனைவரையும் இலக்கிய மன்றச் செயலாளர் தமிழாசிரியர் கா.கங்காராணி வரவேற்றார். உதவித் தலைமையாசிரியர் சி.ஜெயராமன் நன்றி கூறினார்.