• Wed. Nov 4th, 2026

பெரியார் அறிவுலகம்” கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா..,

BySeenu

Nov 4, 2026

கோவை வ உ சி மைதானத்தில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா, “பெரியார் அறிவுலகம்” கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது.

கோவைக்கு அடையாளமாக, கோவையில் திமுக ஆட்சியில், அன்றைய மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ரூ300 கோடி மதிப்பீட்டில், கோவை காந்திபுரத்தில் 7 தளங்களை கொண்ட “பெரியார் அறிவுலக நூலகம்” பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டது. 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தவெக ஆட்சியில் விஜய் திறந்து வைத்தார். இந்நிலையில், கோவைக்கு பெரியார் அறிவுலகம் தந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா கோவை வ உ சி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த பாராட்டு விழாவில் திமுக பொதுச்செயலாளர் அன்புராஜ் வரவேற்புரையாற்றினார். துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார். திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் திக மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தலைமையேற்று நன்றி பாராட்டுரை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி வழங்க உள்ளார்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்புரை வழங்க உள்ளார்.

திராவிடர் கழக கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர் நன்றியுரையும், திக துணைப்பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க உள்ளனர்.

இந்த விழாவில், முன்னாள் அமைச்சர்கள் எவ வேலு,முத்துச்சாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், சக்கரபாணி, கயல்விழி, கழக துணைப்பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, மேயர் ரங்கநாயகி, எம்பிக்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, பிரகாஷ், துணைமேயர் வெற்றிச்செல்வன் மற்றும் மாநில மாவட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.