மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் சார் ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது.,இந்த அலுவலகம் எதிரே கவுண்டம்பட்டி செல்லும் சாலையில் கழிவு நீர் கால்வாய் செல்லும் பாலத்தில் உடைப்பால் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.,

இந்த சாலையின் வழியாக கவுண்டம்பட்டி, விளாம்பட்டி, மலைப்பட்டி உள்ளிட்ட முக்கிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது.,
மேலும் இந்தப் பகுதியில் நீதிமன்றம், டிஎஸ்பி அலுவலகம், மகளிர் காவல் நிலையம்,தாலுகா காவல் நிலையம், மூன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.,

இதனால் இந்த சாலை வழியாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் என ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது.,
இந்த பள்ளத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.,
இதனை உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.,