• Sun. Nov 1st, 2026

கழிப்பறை இல்லா ரயில்வே ஸ்டேஷன்..,

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரகுன்றம் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். இங்கு நாள் தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் வருகிறார்கள், இந்த நிலையில் இங்குள்ள ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பறை வெகுநாட்களாக பூட்டு போட்டு அடைத்து வைக்கபட்டுள்ளது.

பக்தர்கள், மற்றும் பயணிகள் இயற்கை உபாதை செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது பற்றி முத்து லட்சுமி (வயது 63)கூறிய போது நான் மாதத்திற்கு ஒரு முறையாவது முருகனை தரிசிக்க இங்கு வருவேன், இங்குள்ள கழிப்பறை பல மாதங்களாக பூட்டிய நிலையிலேயே உள்ளது, என்னை போன்ற வயோதிகர்கள், மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்தி ற்கு உள்ளாக வேண்டியுள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுத்து பக்தர்கள், மற்றும் பயணிகள் கோரிக்கைகளுக்கு செவி சாயிக்க வேண்டும் என்றார்.

நாம் அங்குள்ள டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுப்பவரிடம், “இங்கு கழிப்பறை வசதி இல்லையா? என்று விசாரித்த போது அவரும் “ஆமாம் இங்கு கழிப்பறை வசதி இல்லை என்று ஆமோதித்தார் ”. ஆகவே திருப்பரகுன்றம் ரயில்வே ஸ்டேஷனில் வரும் காலங்களிலாவது பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்று பயணிகள், மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.