• Sun. Nov 1st, 2026

அன்றாட பழக்கவழக்கத்தை நினைவு கூறும் டூத் பேஸ்ட் பிரஸ் பட்டாசு..,

ByK Kaliraj

Nov 1, 2026

தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகளும் புத்தாடைகளும்தான். ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக பல்வேறு புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்துவதில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடப்பாண்டின் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்காக அன்றாடம் பழக்கவழக்கத்தில் அனைவரும் கடைப்பிடித்து வரும் டூத்பேஸ்ட் பிரஸ் பட்டாசு, அம்மன் கையிலுள்ள சூலாயுதம் வடிவப் பட்டாசு ஆன்மீகத்தின் அடையாளமாகவும், மகாபாரதப் போருக்கு வித்திட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு உபகரணம் பகடைக்காய், தலைத் தீபாவளி புதுமண தம்பதியினர்களை மகிழ்விக்க “லவ் பேர்ட்ஸ்” வடிவிலான பட்டாசு, தேங்காய் வடிவ பட்டாசுகள் என எண்ணற்ற வகையில் புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் கரடி, புலி, சிங்க, பூனை குட்டிகளின் வண்ணப் படங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுளும், சாக்லேட் வடிவ பட்டாசுகளும், மினி விமானம், போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில் ஒளிரும் டிராபிக் சிக்னல் பட்டாசும் இந்த ஆண்டு புதுவரவாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிறுவர்களின் மனங்களை ஈர்க்கும் ரேஸ் கார் வடிவிலான பட்டாசின் திரியைப் பற்ற வைத்தவுடன், தீப்பொறி பறக்க சாலையில் கார் சீறிப்பாய்ந்து செல்லும் வகையில் பிளாஸ்டிக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் வெடித்த பின்பாகவும் விளையாட்டுப் பொருளாகவும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கிறார்கள் பட்டாசு விற்பனையாளர்கள்.

பேட்டி: ஜான்சன்- பட்டாசு விற்பனையாளர்

பட்டாசு என்பது வெறும் வெடிக்கும் பொருளாக அல்லாமல் அவற்றிற்கு பல்வேறு வடிவங்களை கொடுத்துள்ளதால் அவற்றை பார்க்கும்போதும், வெடிக்கும்போதும் எல்லையற்ற மகிழ்ச்சியடைவதாக கூறுகின்றனர் பட்டசுகளை வெடித்து மகிழ்ந்த சிறுவர்கள்

பேட்டி: சுப ஸ்ரீ- சிறுமி

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும் கலர்ஃபுல்லாகவும் கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடித்து விபத்தில் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது…!