• Fri. Oct 30th, 2026

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை..,

ByK Kaliraj

Oct 30, 2026

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்119 -வது ஜெயந்தி மற்றும் 64வது குருபூஜை விழாவையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் .

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது திரு உருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன்,
சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு திமுக சார்பில் மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.