சுதந்திரப் போராட்ட வீரரும், ஆன்மீக மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்களின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை தினத்தை முன்னிட்டு, இன்று (30.10.2026) மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு சார்பில் மாண்புமிகு சட்டம், சிறைத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு. பி. மதன்ராஜா மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. வி.கே. ராஜீவ் ஆகியோர் கலந்துகொண்டு தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.ஆர். தங்கபாண்டியன் (மதுரை மேற்கு), திரு. எம்.வி. கருப்பையா (சோழவந்தான்), திரு. எம்.எம். கோபிசன் (மதுரை தெற்கு), திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), திரு. ஆர். சீனிவாச சேதுபதி (திருப்பத்தூர்) உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு மதுரை நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஏராளமான பொதுமக்களும் சமுதாய தலைவர்களும் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.