இந்தியா – துபாய் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி – 2026-ல் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த ஜே.கே.டி.சி. (JKTC) அணி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இப்போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட அந்த அணியினர், 9 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களைக் கைப்பற்றி கோவைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

சர்வதேச அளவிலான போட்டியில் தங்களது திறமை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

போட்டியில் பங்கேற்று வெற்றியுடன் கோவை திரும்பிய அணியினருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பதக்கங்களுடன் திரும்பிய வீரர், வீராங்கனைகளை தலைமை பயிற்சியாளர் சிரில் வினோத் மற்றும் பயிற்சியாளர்கள் கோகுலகிருஷ்ணன்,
சஞ்சய் ஆகியோரை பெற்றோர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சர்வதேசப் போட்டியில் கோவை அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருப்பது, இளம் தலைமுறையினரிடையே கராத்தே மற்றும் சிலம்பக் கலைகளின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என தலைமை பயற்சயாளர் சிரில் வினோத் தெரிவித்தார்..