• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

பதுங்கி இருந்த 17 சிறை கைதிகளையும் 36 மணி நேரத்தில் பிடித்தது எப்படி?

ByAjmalkhan saleemraja

Oct 29, 2026

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 சிறை கைதிகள் கடந்த 26 ஆம் தேதி இரவு தப்பி ஓடிய நிலையில் 17 கைதிகளையும் போலீசார் கைது செய்து சிறை அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து க.விளக்கு காவல் நிலையத்தில் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாள் விஷ்ணு பிரியா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த போது,

17 சிறை கைதிகள் தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிவிட்டதாக சிறைத்துறையில் இருந்து காவல்துறைக்கு தகவல் வந்ததும் உடனடியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை தீவிரபடுத்தினோம்.

முதல் 24 மணி நேரத்தில் 13 சிறை கைதிகளை கைது செய்துள்ளோம், அடுத்த 12 மணி நேரத்தில் 4 கைதிகளை கைது செய்தோம், தப்பி ஓடிய 17 சிறை கைதிகளில் லிங்க பிரசாத் மீது 3 குண்டாஸ் வழக்குகளும் கருப்பசாமி, ராஜ்குமார், தருண் குமார் மற்றும்
சிலம்பரசன் ஆகியோர் மீது ஒரு குண்டாஸ் வழக்குகள் மற்றும் மற்ற 12 சிறைக் கைதிகள் மீது திருட்டு வழக்கு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

சிறையில் இருந்து தப்பிப்பதற்காக “லிங்க பிரசாத்” என்ற சிறைக்கைதிதான் மூளை காரணமாக செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஏன் சிறையில் இருந்து தப்பித்தார் என்று விசாரித்த போது பிணையில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் அவர் மீது வழக்குகள் இருந்துள்ளது மேலும் குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது. இதனால் இனிமேல் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்ற நிலையில்தான் சிறையில் இருந்து தப்பிப்பதற்கு திட்டமிட்டு உள்ளார்

கைது செய்யப்பட்ட 17 சிறை கைதிகளையும் பாளையங்கோட்டை, கோயமுத்தூர், கடலூர், சேலம் உள்ளிட்ட சிறையில் பிரித்துப் பிரித்து அடைத்துள்ளோம்.

சிறையில் இருந்து கைதிகளை தப்பியதாக தகவல் வந்த நிலையில் முதல் குற்றவாளியை சிறிது நேரத்திற்குள் கைது செய்தோம், தொடர்ந்து மலைகளில் பதுங்கி இருந்த கைதிகளை தேடுவதில் சவால்கள் நிறைந்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து 17 தனிப்படைகள் அமைத்து சிறை கைதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினோம்.

தேக்கம்பட்டி சிறை வளாகம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம், கிராமத்திற்குள் புதிதாக யாரேனும் வந்தால் ஏதேனும் உதவிகள் கேட்டால் கிராம மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர் இதனால் சிறை கைதிகளைப் பிடிக்க கிராம மக்களும் தங்களுக்கு உதவி புரிந்தனர்.

மலை பகுதிகளில் பதுங்கி இருந்த 12 சிறைக்கைதிகளை ட்ரோன் மூலம் பறக்க விட்டு அவர்களை கண்டறிந்து கைது செய்தோம்.

மேலும் மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை செய்ததால் கைதிகள் யாரும் மாவட்ட எல்லையை கடந்து செல்லவில்லை என்பதை உறுதி செய்தோம்.

கூடலூர் அருகில் கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்ற சகோதரர்களான இரண்டு பேரை (மீனாட்சி சுந்தரம், திருப்பதி) கூடலூர் புறவழிச்சாலை அருகே கைது செய்தோம்.

சிறையிலிருந்து தப்பி சென்ற 17 கைதிகளில் 1 சிலரை தவிர மற்ற அனைவருக்கும் ஒருவருக்கிடையே ஒருவருக்கு எந்த தொடர்பும் இல்லை.

கொலை செய்வதற்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு சிறையில் இருந்து தப்பியதாக போன்ற பல்வேறு தகவல்களும் வதந்திகள் மட்டுமே முறையான விசாரணை செய்த பின்பு தான் அனைத்தும் தெரியவரும்.

லிங்க பிரசாத் மேல் 26 வழக்கு உள்ளது, 3 குண்டாஸ் உள்ளது.

கூடலூர் புறவழிச்சாலை அருகே லிஃப்ட் கேட்டு நின்று இருந்த மீனாட்சி சுந்தரம், திருப்பதி ஆகிய சகோதரர்களை கைது செய்தோம்.

ரயில் தண்டாவலம் வழியாக கைதிகள் தப்பிச்செல்ல வாய்ப்பு இருந்ததால் தண்டவாளம் வழியாகவே நடந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினோம்.

சிறைக்கைதிகள் யாரேனும் மக்களை தொடர்புகொள்ள முயன்றபோது எங்களுக்கு உடனடியாக தகவல் கிடைத்துள்ளது, மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்ததால் ஊரில் யாரேனும் புதிதாக வந்தால் எங்களுக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர்.

சிறையில் இருந்த சமையல் கரண்டியை வைத்து சிறை காவலர்களை தாக்கி விட்டு அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காலில் செருப்புகள் இல்லாமல் தப்பிச் சென்ற நிலையில் கரடு முரடான மலையில் ஏறிய போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது இதனால் கைதிகள் அணிந்திருந்த சட்டையை கிழித்து காலில் வைத்து கட்டி மலை ஏறி நடந்து சென்றுள்ளனர்.

தங்களது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கைதிகள் தப்பி ஓடி 36 மணி நேரத்தில் 17 கைதிகளையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என தெரிவித்தனர்.